துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தன்னுடைய முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா என முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக பொருளாளர் துரை முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் நேற்று நடத்த எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தில் அதிக காலங்கள் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. அதிமுகவில் ஒரு முதலமைச்சர் அல்ல ஓராயிரம் பேர் உள்ளனர். திமுகவில் ஒரு முதலமைச்சர் மட்டும்தான் உள்ளனர். அதிமுகவில் என்னைப்போல் பல லட்சம் முதலமைச்சருக்கான தகுதி உடையவர்களாக உள்ளனர். ஒரு சாதரண நபர் கூட அதிமுகவில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக முதலமச்சராக வரமுடியும். திமுகவில் இது முடியுமா?” என பேசியிருந்தார்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “மிஸ்டர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே மூன்று முறை முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.